பிள்ளையான் – கருணா – வியாழேந்திரனிற்கு காத்திருக்கும் நெருக்கடி! உண்மையைக் கூறும் முக்கியஸ்தர்..!

தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவாக இருக்கும். முஸ்லீம் மக்களின் வாக்களிப்பு வீதம் அதிகரிக்கும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கூடிய வாக்குகளை பெற்று முதலாம் இடத்திற்கு வரும் கட்சி ஆகக்குறைந்தது 70ஆயிரம் வாக்குகளை பெற வேண்டும் என மூத்த ஊடகவியலாளர் இரா . துரைரெட்னம் அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது….

மாவட்ட விகிதாசார தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்ட பின் 1989, 1994, 2000, 2001 ஆகிய ஆண்டுகளில் தமிழர் விடுதலைக் கூட்டணியும், 2004, 2010, 2015 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தமிழரசுக்கட்சியும் ஆகக்கூடிய வாக்குகளை பெற்று முதலாம் இடத்திற்கு வந்திருந்தன.

1989ஆம் ஆண்டை தவிர ஏனைய அனைத்து தேர்தல்களிலும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் இரண்டாம் இடத்திற்கு வந்திருந்தது.

2000ஆம் ஆண்டைத்தவிர ஏனைய அனைத்து தேர்தல்களிலும் முதலாம் இடத்திற்கு வந்த கட்சி மூன்று ஆசனங்களையும் அதற்கு அடுத்த நிலையில் வரும் இரு கட்சிகள் தலா ஒவ்வொரு ஆசனங்களையும் பெற்றிருந்தார்கள்.

மட்டக்களப்பு மாவட்ட வாக்காளர் தொகை மற்றும் வாக்களிப்பு வீதத்தின் அடிப்படையில் முதலாம் இடத்திற்கு ஒரு கட்சி வருவதாக இருந்தால் 75ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 75ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெறக் கூடிய வாக்கு வங்கி உள்ள கட்சியாக தமிழரசுக்கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) தான் உள்ளது. வேறு எந்த தனி ஒரு கட்சியும் 75ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குவங்கியை தற்போது கொண்டிருக்கவில்லை. என்னதான் மாற்றம் எழுச்சி என சொல்லிக் கொண்டாலும் 75ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெறும் நிலைக்கு இதுவரை வேறு கட்சிகள் வளரவில்லை. இன்னும் 5 அல்லது 10 வருடங்களில் மாற்றங்கள் வரலாம்.

எனவே தமிழரசுக்கட்சி இம்முறையும் 3ஆசனங்களை பெறும்.

இரண்டாவது இடத்திற்கு வரும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் குறைந்தது 40ஆயிரம் வாக்குகளை பெறும்.

அவர்களுக்கு ஒரு ஆசனம் கிடைக்கும். சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷிலிருந்து இம்முறை நஸிர்தான் வெற்றி பெறுவார்.

ஐந்தாவது ஆசனம் யாருக்கு என்பதில் தான் கடும் போட்டியிருக்கும்.

ஹிஸ்புல்லாவா, பிள்ளையானா, வியாழேந்திரனா, அமிர்அலியா என்பதுதான் போட்டி

இதில் தமிழர்களின் வாக்குகளை பிரித்து தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்து கடந்த காலத்தில் நடந்தது போல முஸ்லீம் ஒருவரை வர செய்வதற்காக தமிழ் கட்சிகள் பல வாக்குகளை பிரிக்க உள்ளன.

விக்னேஸ்வரனின் கட்சி ஆனந்தசங்கரியின் கட்சி என தமிழ் வாக்குகளை பிரிப்பிதற்கு சில கட்சிகள் களமிறங்கியிருக்கின்றன.

ஹிஸ்புல்லாவை வெல்ல வைக்க வேண்டும் என்பதில் காத்தான்குடி பள்ளிவாயல் சம்மேளனம் உட்பட பல அமைப்புக்கள் மும்முரமாக வேலை செய்கின்றன.

பிள்ளையானை வெல்ல வைக்க வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட தொகை வாக்குகளை சேகரிக்க கூடிய வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வியாழேந்திரன் தலைமையில் பொதுஜன பெரமுன போட்டியிடுகிறது.

மட்டக்களப்புக்கு அபிவிருத்தி தேவை எனில் நேரடியாக எங்களுக்கு வாக்களியுங்கள் என அவர்கள் பிரசாரம் செய்கிறார்கள்.

அமீர் அலி கடந்த முறையை போல வாக்குகளை பெறக் கூடிய நிலையில் இல்லை.

ஐந்தாவது ஆசனம் யாருக்கு கிடைக்கப்போகிறது என்பதை பொறுத்தே மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களுக்கு நான்கு ஆசனமா மூன்று ஆசனமா என்பது தெரியவரும்

Be the first to comment

Leave a Reply