சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான செயன்முறை தேர்வை தனியாரிடம் செயற்ம்படுத்தும் முறை இரத்து..!

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான செயன்முறைத் தேர்வை தனியார் சாரதி பயிற்சிப் பாடசாலைகள் ஊடாக நடத்தும் அனுமதியை இரத்துச் செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.


பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீரவால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.


சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான செயன்முறைத் தேர்வை தனியார் சாரதி பயிற்சிப் பாடசாலைகள் ஊடாக நடத்துவதற்கு 2017ஆம் ஆண்டு அனுமதியளிக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில் அந்த அனுமதியை தற்போதைய அமைச்சரவை இரத்துச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply