யாழ்மாவட்ட அரச அதிபருக்கு மொட்டைக்கடதாசி அனுப்பினாரா முல்லைத்தீவு உதவி அரசாங்க அதிபர்..! அம்பலமாகிய உண்மைகள்..!

இலங்கை வாழ் தமிழர் துரோகியின் அடிவருடியாகிய முல்லைத்தீவு உதவி அரசாங்க அதிபர் கனகேஸ்வரனின் திருவிளையாடல்கள் அம்பலம்..!

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் என்ற பகுதி புகழ்பூத்த பெரியோர்களை உருவாக்கிய பிரதேசம் என்ற பெயரையும் லஞ்சம் ஊழல் அற்ற அரச உத்தியோகத்தர்களையும் கொண்டு இயங்கி வரும் பகுதி என்ற பெயரையும் தெற்கில் பெற்றுள்ள பகுதியாகும்.

ஆனால் பூஞ்செடிக்குள் பூத்த காஞ்சொறி போல ஒரு சில கயவர்களையும் யாழ்குடாநாடு அறியாமலில்லை.

அந்த வரிசையில் தனது இடத்தை பிடித்த நபரே கனகசபாபதி கனகேஸ்வனன் என்ற கொடிகாமம் என்ற பகுதியை சேர்ந்த நபராவார்.

இவர் ஆரம்பத்தில் இருந்தே அலுவலகத்தில் பூனை போலவும் வெளியே தெருச்சண்டியர் போலவும் வலம் வரும் நபர் என்பது அறிய வந்துள்ளது.

இவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மக்கள் மத்தியில் நற்பெயரைக்கொண்டு வலம் வந்தாலும் அவரின் இலட்சியம் அரசியிலில் புகுந்து தேர்தலில் போட்டியிடுவதாகும்.

இவர் தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் பணியாற்றியபோதும் முன்பு யாழ் மாவட்ட செயலகத்திலேயே பணியாற்றி இருந்தார்.

அதன்போது இவரது அரசியல் அடிவருடி செயற்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்தது.

பின்னர் ஆட்சி மாற்றத்தின் பின்னர் உடனடியாக இவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

ஆனால் அதே தினத்தில் தனது முகப்புத்தகத்தில் தனக்கு சார்பானவர்களைக்கொண்டு நன்றாக வேலை பார்த்தார்.

பின்னர் “தர்மத்தின் வாழ்வுதைனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்” என்று அறிக்கை விட்டார்.

அதற்கு முன்னர் வடமராட்சி கிழக்கு மாதங்கேணில் பிரதேச செயலராக பணியாற்றிய போது மண்கொள்ளையில் நன்றாக ஈடுபட்டார் என்றும் மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்பின்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தேச துரோகிக்கு காட்டிய விசுவாசத்தின் பலனாக யாழ் மாவட்ட உதவி அரசாங்க அதிபராக பதவி ஏற்றார்.

பின்னர் தற்போதைய அரசால் அடித்து விரட்டப்பட்டார்.

தற்போது யாழ்மாவட்டத்தின் அரச அதிபராக இருக்கும் கணபதிப்பிள்ளை மகேசன் என்ற அரசியல் கலப்பில்லாத ஊழல் அற்ற மனிதரிற்கு எதிராக தனது அயோக்கிய சாட்டையை சுழற்ற ஆரம்பித்துள்ளார்.

ஆனால் தான் புத்திசாலி என்ற நினைப்பில் தற்போது உதவி அரசாங்க அதிபராக இருக்கும் திரு பிரதீபன் அவர்களை தாக்குவது போல் தாக்கி தனது லீலைகளை ஆரம்பித்துள்ளார். ஆனால் இவரதும் அவரது எஜமானரதும் நோக்கம் தற்போதுள்ள அரச அதிபரை இடம் மாற்றி தனது எஜமானருக்கு எதிர்வரும் தேர்தலில் உதவி செய்வதாகும்.

ஆனால் தற்போதுள்ள மேன்மைதங்கிய ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்‌ஷவின் ஆட்சியில் அவை செல்லாது என்பது இவர் அறிய வாய்ப்பில்லை.

இவர் தனது எஜமானரின் வழிகாட்டலில் தற்போது மொட்டைக்கடதாசி அனுப்பும் வேலையை ஒரு அரச அதிகாரியாக இருக்கும் இவரே ஆரம்பித்துள்ளமை மக்களை கவலை அடையச்செய்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு சகல பிரதேச செயலகங்களுக்கும் ஒரு மொட்டைக்கடதாசி அனுப்பி உள்ளார். தனது வேலையாட்களைக்கொண்டு கைங்காரியத்தை முடித்து வைத்துள்ளார் என்று கூறப்படுகின்றது.

அவர் அனுப்பி வைத்துள்ள மொட்டைக்கடதாசி உங்கள் பார்வைக்கு..

பக்கம் 1
பக்கம் 2
உதவி அரசாங்க அதிபரது தனிப்பட்ட முகநூல் PAGE

அரசாங்க உத்தியோகத்தர்களின் தனிப்பட்ட முகநூல் அல்ல இது.

அவரது குட்டி ராஜ்ஜியத்தின் அன்றாட செயல்பாடுகளை மக்களுக்கு எடுத்த செல்லும் அவரது பத்திரிக்கை..

அங்கஜன் இராமநாதனஇக்கு எதிராக செயல்படுவதாக இவர் கூறினாலும் இவரது உள் நோக்கம் மக்களாகிய உங்கள் முடிவிற்கு., மற்றும்

இவர் தனது தனிப்பட்ட ஓர் பாராட்டு விழாவை தனது செலவில் தனது அடியாட்களைக்கொண்டு கொடிகாமத்தில் நாடாத்தியமை பல அரச அதிகாரிகளின் விசனத்தற்கு ஆளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நபர்கள் எமது சமூகத்திற்கு ஆபத்தானவர்கள் என்பதை மக்களாகிய உங்கள் பார்வைக்கு கொண்டு வருவதே எமது நோக்கம்.

எனவே இவ்விபரங்கள் உரியவர்களை சென்றடைந்து நமது சமூகம் காப்பாற்றப்படும் வரை பகிரவும்.

மற்றும் இவர் தொடர்பான மேலதிக விபரங்கள் பூதக்கண்ணாடிக்கு கிடைக்கப்பெற்றும் இவர் பெண்குழந்தைகளின் தந்தை என்ற ரீதியிலும் அவர்களின் எதிர்காலம் கருதியும் பிரசுரிக்கப்படவில்லை என்பதை வாசகர்களுக்கு அறிய தருகின்றோம்.

Be the first to comment

Leave a Reply