குடாநாட்டில் மனநோயாளி போல் தென்படும் வெளிநாட்டவர்..!

யாழ்ப்பாண நகர் வீதிகளில் மன நோயாளியாகி அலைந்து திரியும் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அடைக்கல மாதா தேவாலயத்தின் திருச்சொரூபத்தை உடைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த வெளிநாட்டவர் மனநலம் குன்றியவர் என்று தெரவித்து, அவரை சிகிச்சைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் பொலிஸார் சேர்த்துள்ளனர்.

பிற நாட்டிலிருந்து சுற்றுலாவுக்காக வந்த குறித்த வெளிநாட்டவர், மனநம் பாதிக்கப்பட்ட நிலையில் நீண்ட நாட்களாக யாழ்.நகர் வீதிகளில் சுற்றித் திரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply