பெருந்தொகை எரிபொருளை இலங்கை அரசாங்கம் களஞ்சியப்படுத்திக்கொள்வதற்கு ஆதரவு..!

oil tanks trincomalae

Oil tanks

திருகோணமலையில் அமைந்துள்ள இந்திய எரிபொருள் நிறுவனம் வசமுள்ள சில எரிபொருள் குதங்களை இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொள்வதற்கு இந்திய அரசாங்கத்தின் ஆதரவை பெற்றுத்தருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே தெரிவித்துள்ளார்.

எரிபொருள்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் எரிபொருட்களின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் பெருந்தொகை எரிபொருளை இலங்கை அரசாங்கம் களஞ்சியப்படுத்திக்கொள்வதற்காக இந்த விடயத்தில் உதவுவதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலையில் உள்ள சுமார் 100 எரிபொருள் குதங்களை இந்திய நிறுவனம் குத்தகைக்கு பெற்றுள்ளது.

இவற்றில் சில குதங்களை பெற்றுக்கொள்ள உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அது தனியார் நிறுவனத்துக்கு சொந்தமாகையால் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அவற்றை பெற்றுக்கொள்ளும் வகையிலான கலந்துரையாடல்களுக்கு உதவுவதாக உயர்ஸ்தானிகர் உறுதியளித்துள்ளதாக அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இந்திய நிறுவனம் 35 வருட குத்தகைக்கு 99 எரிபொருள் குதங்களை பெற்றுள்ளது. அவற்றில் தலா ஒரு குதம் 12ஆயிரத்து 100 மெற்றிக்தொன் கொள்ளளவைக்கொண்டது.

இதற்காக அந்த நிறுவனம் வருடத்துக்கு ஒரு லட்சம் அமெரிக்க டொலர்களை கொடுப்பனவாக இலங்கை அரசாங்கத்துக்கு செலுத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply