கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? துறைசார் அமைச்சர் வெளியிட்ட தகவல்..!

கட்டுநாயக்க விமான நிலையம் எதிர்வரும் ஆஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படலாம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்காக புதிய இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பல்கேவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விமான நிலையம் திறப்பது தொடர்பில் உயர் ஸ்தானிகர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி விமான நிலைய சுற்றுலா பயணிகளுக்காக திறப்பதற்கு திட்டமிடப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை நிறைவடைந்த பின்னர் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply