கொரோனா வைரஸ் தொற்று நோய் தானாகவே பலவீனமடைந்து வருகிறது என விஞ்ஞானிகள் அறிவிப்பு ..!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 63,66,193ஆக உயர்ந்து உள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 29,03,605ஆக உயர்ந்து உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,77,437ஆக உயர்ர்ந்து உள்ளது.

ஐரோப்பாவில், கொரோனா வைரசுக்கு முதல் இலக்கு இத்தாலிதான். பிப்ரவரி 21-ஆம் தேதியன்று கொரொனா வைரஸின் முதல் பாதிப்பு வெளியானது. அங்கு இதுவரை 2,33,197 பேருக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, மொத்தம் 33,475 பேர் வைரசுக்கு பலியாகியுள்ளனர். வயதானவர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் இத்தாலியில் கொரோனா தாக்குதலின் ஆரம்ப நாட்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்தது. ஏனெனில் கொரோனா வயதானவர்களை எளிதில் தாக்கியது.

இத்தாலி இப்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கி உள்ளது.. கிட்டத்தட்ட மூன்று மாத ஊரடங்கிற்கு பின்னர் தலைநகர் ரோம் திறக்கப்பட்டுள்ளது. பிரபல சுற்றுலா நகரமான ரோமில் கொலோசியம் மற்றும் வாடிகன் அருங்காட்சியகம் திறக்கப்பட்ட போது, ​​மக்கள் திரளாக வந்து மகிழ்ந்தனர்.

தற்போது, கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் மும்முரமாக நடந்து வருகிறது. விஞ்ஞானிகள் தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்று தெரியவில்லை… அதற்கு முன்பு வைரஸே, தன்னை பலவீனப்படுத்தி முடிவுக்கு வந்துவிடுமா என்பது குறித்த விவாதம் எழுந்து உள்ளது

Be the first to comment

Leave a Reply