சலுகை வழங்காவிடில்பேக்கரி உற்பத்திகள் விலை அதிகரிப்பு

பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கக்கூடும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால் தங்களின் தொழிற்துறை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் N.K. ஜயவர்தன குறிப்பிட்டார்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தங்களால் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் பேக்கரி உற்பத்திகளுக்கு தேவையான மூலப் பொருட்களின் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் N.K. ஜயவர்தன குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

எனவே, மூலப் பொருட்களுக்கு சலுகை வழங்காவிடின் தங்களின் உற்பத்தி பொருட்களுக்கான விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply