
கொரோனா நிவாரணமாக கடனுக்கான வட்டி அறவிடுவதை நிறுத்துமாறு வழங்கப்பட்ட உத்தரவை நிறுத்தி மீண்டும் வட்டியை அறவிட அனுமதி வழங்குமாறு வணிக வங்கிகள், இலங்கை மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்
- இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை
- ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா? சவால் விடுத்துள்ள ஹரின்
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது
- சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது
கடனுக்காக வட்டியில் ஒரு பகுதியையாவது அறவிட இடமளிக்குமாறு வங்கியாளர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
கடன்களுக்கான வட்டி அறவிடப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்ட காரணத்தினால், வங்கிகளின் வட்டி வருமானம் பாதியாக குறைந்துள்ளதாக வணிக வங்கிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த வட்டியை மீண்டும் அறவிடுவது குறி்த்து வணிக வங்கிகள், மத்திய வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதுடன் ஒரு வாரத்திற்குள் தமது கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளன.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தெரிவு செய்யப்பட்ட தொழிற்துறை மற்றும் நபர்களுக்காக இலங்கை மத்திய வங்கி கடந்த மார்ச் மாதம் நிவாரண பொதி ஒன்றை அறிமுகப்படுத்தியது.
மார்ச் 24ஆம் திகதி சம்பந்தப்பட்ட நிவாரண யோசனைகளை உள்ளடக்கி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த மத்திய வங்கி, சுற்றுலா, ஆடை உற்பத்தி, பெருந்தோட்டம், தகவல் தொழிநுட்பம், சுயத்தொழில், சிறிய மற்றும் மத்திய தர வர்த்தகங்களுக்கு நிதி சலுகையை வழங்குமாறு வணிக வங்கிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
Be the first to comment