சுகாதார வழிகாட்டுதல்களை உருவாக்கும் பணிகள் இரு வாரங்களில் இறுதி செய்யப்படும்..!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான சுகாதார வழிகாட்டுதல்களை உருவாக்கும் பணிகள் நிறைவுக்கு வந்துள்ளதாகவும் அடுத்த இரண்டு வாரங்களில் இறுதி செய்யப்படும் என்றும் அறிய முடிகின்றது.

இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து தெரிவித்துள்ள சுகாதார சுற்றுச்சூழல், தொழில் சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகயம் லக்ஷ்மன் கம்லாத், இறுதி வரைவு தற்போது திருத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

தேர்தல் தொடர்பாக அனைத்து தரப்பினருடனும் சந்திப்புகளை நடத்தி வருவதாகவும் கடந்தவாரம், பொலிஸாருடன் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் குறிப்பிட்ட அவர், இதில் தெரிவிக்கப்பட்ட விடயங்களையும் உள்ளடக்குவதாக தெரிவித்தார்.

மேலும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்த பணிகள் அனைத்தும் முடிவுக்கு வரும் என நம்புவதாகவும் அதற்கு முன்னர்கூட சிலசமயம் இறுதி செய்யப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புக்களுடன் கலந்தாலோசித்து நாடாளுமன்றத் தேர்தலுக்கான சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களை வகுக்கும் பணிகள் லக்ஷ்மன் கம்லாத் தலைமையில் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply