நானும் கறுப்பின வெறியால் பாதிக்கப்பட்டவனே..! கெயில்ஸ் கவலை..!

நானும் இனவெறியால் பாதிப்புக்குள்ளானவன் தான்! அமெரிக்காவில் கறுப்பினத்தவர் உயிரிழந்தது தொடர்பாக மனம் உருகிய கிறிஸ் கெய்ல்

அமெரிக்காவில் கருப்பினத்தவர் பொலிசாரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கிறிஸ் கெய்ல் உருக்கமாக பேசியுள்ளார்.

அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரத்தில் கடந்த வாரம் ஜார்ஜ் ஃப்ராய்ட் என்ற கருப்பினத்தவர் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து அமெரிக்காவில் உள்ள கருப்பினத்தவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து அவரது இறப்புக்கு நீதி கேட்டு அந்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல், மற்றவர்களின் வாழ்க்கையை போலவே கருப்பினத்தவர்களின் வாழ்க்கையும் முக்கியமானது. கருப்பின மக்களை முட்டாள்களாக சித்தரிப்பதை நிறுத்துங்கள், கருப்பின மக்களும் புத்திசாலிகளாக உள்ளனர்.

நான் உலகம் முழுவதும் பயணித்துள்ளேன். அங்கு இன ரீதியாக பல்வேறு விமர்சனங்களை நான் சந்தித்துள்ளேன். இனவெறி என்பது கால்பந்தில் மட்டும் அல்ல, அது கிரிக்கெட்டிலும் உள்ளது என தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply