இந்தியாவை அலைக்கழிக்க ஆரம்பித்துள்ள கொரோணா..!

இந்தியாவில் 24 மணி நேரத்தில் மேலும் 8,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 98 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அந்த தொற்றிலிருந்து குணமானோரின் எண்ணிக்கையும் 95 ஆயிரத்து 500ஐ கடந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8 ஆயிரத்து 171 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 204 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 95 ஆயிரத்து 706ஆகவும், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 598ஆகவும் அதிகரித்துள்ளது

.நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 97 ஆயிரத்து 581 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

அதேநேரத்தில் 95 ஆயிரத்து 527 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்

Be the first to comment

Leave a Reply