மருத்துவ சுகாதர தரப்பினர் அனைவருக்கும் இம்முறை தபால் மூலமாக வாக்களிக்க ஏற்பாடு..!

புதிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இம்முறை மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை அலுவலர்களின் சேவை தேர்தல் தினத்தன்று அவசியப்படலாம் என்பதால் இவர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பபடிவங்கள் ஏற்கனவே வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார சேவை அலுவலகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் தங்கள் வைத்தியசாலை பணிப்பாளர் அல்லது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை தொடர்பு கொண்டு தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்க முடியும்.

Be the first to comment

Leave a Reply