உலகை அச்சுறுத்தும் வெட்டுக்கிளியை நமது நாட்டிலிருந்து விரட்டுவது எப்படி? நமது முன்னோர்கள் காட்டிய வழி..!

உலகை அச்சுறுத்தும் வெட்டுக்கிளிகள் நமது நாட்டிலும் தற்பொழுது தமது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியுள்ளன.

வெட்டுக்கிளிகளை விரட்டுவது தொடர்பில் அதிகாரிகள் ஆராய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நமது முன்னோர்கள் இந்த வெட்டுக்கிளிகளை இயற்கை பொருட்களால் செய்ய பட்ட மிளகாய் கரைசல் என்னும் இயற்கை மருந்தைப் பயன்படுத்தி அழித்து கூண்டோடு விரட்டி இருக்கிறார்கள்.

அது எப்படி என்று நாமும் அறிந்து அந்த வழியை பின்பற்றுவோம்.

அதாவது பச்சை மிளகாய் 10 கிலோ பூண்டு 5‌ கிலோ சின்ன வெங்காயம் 5 கிலோ ஆகியவற்றை அரைத்து அதனுடன் பசு மாட்டின் கோமியம் (சிறுநீர்) 10 லிட்டர் கலந்து மூடி வைத்து இரண்டு நாட்கள் கழித்து அதை வடிகட்டி 15 லிட்டர் டேங்குக்கு 2 லிட்டர் என்ற அளவில் தண்ணீரில் கலந்து பயிர்களுக்கு அடித்து வெட்டுக்கிளி, வண்டு, பூச்சி, பாம்பு என்பவை பயிர்களை தாக்காமல் காத்து வந்துள்ளனர்.

எனவே எச்சரிக்கையுடன்டன் இருந்து வெட்டுக்கிளிகளால் ஏற்படும் பேரழிவிலிருந்து எமது பயிர்களை வருமுன் காப்போம். வெட்டுக்கிளி கூட்டத்தை எமது நாட்டில் இருந்து வேரோடு அழிப்போம்.

Be the first to comment

Leave a Reply