ஆறுமுகம் தொண்டமான் படிக்கட்டுகளில் விழுந்தே உயிரிழந்தாரா? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி..!

மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் படிக்கட்டுகளில் விழுந்தே உயிரிழந்தார் என போலியான தகவல்கள் பரவி வருவதாக அவரது மகன் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது இந்தத் தகவலை வெளியிட்டார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

“ஆறுமுகம் தொண்டமான் படிக்கட்டுகளில் விழுந்தே உயிரிழந்தார் என தகவல்கள் சமூக இணையத்தளங்களில் வெளியாகின்றன. எனினும் இது முற்றிலும் தவறான தகவலாகும்.

இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமையை நானும் பார்வையுற்றேன். மிகவும் கவலை.. ஏன் இவ்வாறு போலி தகவல்களை பரப்புகின்றனர் என்பது குறித்து. மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது. அப்படி ஒன்றும் நடக்கவில்லை. அவருக்கு சில நிமிடங்களில் மாரடைப்பு ஏற்பட்டது. அந்த ஓரிரு நிமிடங்களிலேயே அவர் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Be the first to comment

Leave a Reply