கட்டுநாயக்க விமான நிலைய வழமையான நடவடிக்கைகள் ஆரம்பிக்க ஏற்பாடு..!

மூடப்பட்டுள்ள கட்டுநாயக்க விமான நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் நுழையும் நபர்களுக்கு கொரோனா தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கான இயந்திரத்தை தயாரிக்கவுள்ளதாக அரச வைத்திய ஆய்வக விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. அவ்வாறு இயந்திரம் தயாரிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை மீண்டும் திறப்பதற்கு முன்னர் விமான நிலைய வளாகத்திற்குள் ஆய்வக வசதிகளை தயார்படுத்துவது அவசியமான விடயமாகும் என அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply