சுகாதார பணிப்பாளருக்கு அச்சுறுத்தல் விட்ட தொண்டமானின் கட்சி உறுப்பினர்கள் ..!

காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கட்சியைச் சேர்ந்த சிலர் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்கவுக்கு தொலைபேசி ஊடாக மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை பொது சுகாதார அதிகாரிகளின் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்தப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகனின் ஆதரவாளர்கள் சிலர் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றாமல் நடந்துகொள்வதாகவும் அந்த சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதன் காரணமாக நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் சமூகத்தினிடையே பரவலாம் என்றும் அந்த சங்கம் எச்சரித்துள்ளது

Be the first to comment

Leave a Reply