கொரோனாவுக்கு பலியான முதல் குழந்தை..! கவலையில் மருத்துவ உலகம்..!

கொரோனாவுக்கு பலியான முதல் குழந்தை!

கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக சுவிட்சர்லாந்தில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த முதல் குழந்தை இதுவாகும். இந்த செய்தியை, பெடரல் பொது சுகாதார அலுவலகத்தின் தொற்று நோய்ப்பிரிவின் தலைவரான Stefan Kuster உறுதி செய்துள்ளார்.

Aargau மாகாணத்தில் வாழும் அந்த குழந்தையின் பெற்றோர், வெளிநாடு சென்றபோது கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள்.

இதற்கிடையில், குழந்தையின் மரணத்துக்கு காரணம் என்னவென்று தெளிவுபடவில்லை என்கிறார் Aargau மாகாண மருத்துவரான Yvonne Hummel.

மே மாதம் 26ஆம் திகதி, ஒரு வயதுக்கும் குறைவான ஒரு குழந்தை சூரிச்சிலுள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. அந்த குழந்தை மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தது.

கொரோனா பரிசோதனையில், அதற்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது என்று கூறும் Hummel, பின்னர் அந்த குழந்தை இறந்துபோனது என்கிறார்.

அந்த குழந்தைக்கு பயங்கரமான மூளைக்காய்ச்சல் இருந்தது என்று கூறும் Hummel, அந்த குழந்தை எதனால் இறந்தது என்பதை தற்போது எங்களால் கூற இயலவில்லை என்கிறார். தொடர்ந்து அந்த குழந்தையின் மரணம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

Be the first to comment

Leave a Reply