அமெரிக்காவில் 18 லட்சத்தை கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..! பதறும் அமெரிக்கா..!

அமெரிக்காவில் 18 லட்சத்தை கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

சீனாவில் இருந்து பரவத் தொடங்கி அமெரிக்காவில் மையம் கொண்டுள்ள கொரானா தாக்கத்தினால் உலகம் முழுவதும் தினசரி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 23 ஆயிரத்து 300 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

அங்கு வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 16 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் நோய்த் தொற்றினால் ஆயிரம் பேர் வரை உயிரிழந்ததால் இதுவரை ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.

17 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால் அங்கு மரணிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

Be the first to comment

Leave a Reply