கொரோனா தொற்றின் உயிர் இழப்புக்களில் சீனாவையே பின் தள்ளிய இந்தியா..!

கொரோனா தொற்றின் உயிர் இழப்புக்களில் சீனாவையே பின் தள்ளிய இந்தியா

இந்தியாவில் நேற்றையதினம் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1.6 இலட்சத்தைத் கடந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதேநேரத்தில் இந்தியா கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் சீனாவை முந்தியுள்ளதாக இந்திய மத்திய அரசு மற்றும் அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணிநேரத்தில் 7,466 பதிய தொற்றாளரர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், கொடிய வைரஸ் தொற்றுநோயால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா ஒன்பதாவது இடத்திலுள்ளது.

அதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் 175 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 4,706 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்தியா கொரோனா வைரஸ் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் சீனாவை முந்தியுள்ளது.

கொரோனா வைரஸ் முதலில் பரவத் தொடங்கிய சீனாவில் 82,995 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 4,634 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இதேவேளை உலகளவில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், அமெரிக்கா 17 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு முதலாம் இடத்திலுள்ளது.

அதேவேளை நேரத்தில் இந்தியாவை விட அதிகமான கொரோனா தொற்றாளர்களை கொண்டுள்ள நாடுகளாக பிரேசில், ரஷ்யா, இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி, துருக்கி இப்போது 10 வது இடத்திலும், சீனா 14 ஆவது இடத்திலும், அதற்கு கீழே ஈரான், பெரு மற்றும் கனடாவும் உள்ளது.

ஒரு இலட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், பிரேசில், பெல்ஜியம், மெக்ஸிகோ, ஜேர்மனி மற்றும் ஈரான் ஆகியவை முதல் 10 இடங்களில் உள்ளதுடன் 11 ஆவது இடத்தில் கனடாவும் மற்றும் 12 ஆவது இடத்தில் நெதர்லாந்தும், அடுத்தபடியாக இந்தியா 13 வது இடத்தில் உள்ளது.

உலகெங்கிலும் உள்ள நாடுகளில் கிட்டத்தட்ட 59 இலட்சத்துக்கும் அதிகமான மக்களைப் பாதித்து உள்ளது. கொரோனா பாதிப்பால் உலகெங்கிலும் 3.6 இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்,

ஆனால் கடந்த சில நாட்களாக சீனாவில் மிகக் குறைவான புதிய பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

இதேவேளை, இலங்கையில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதோடு, இதுவரை 1,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில், 745 பேர் குணமடைந்தும்,10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply