மாணவர்களுக்கு இணையம் மூலமான கல்வியை பெற்றுக்கொடுக்கும் திட்டம் ஆரம்பம்..!

டயலொக் நிறுவனம் கல்வி அமைச்சுடன் இணைந்து சிறுவர்களுக்கு வீடுகளில் இருக்கும்போது இணையம் மூலமான கல்வியை பெற்றுக்கொடுக்கும் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.

இணைய வசதியுடன் அல்லது வசதியில்லாமல் தொலைபேசியின் ஊடாக இந்த திட்டம், மாணவர்களின் ஆசிரியர்கள் மூலம் வீடுகளில் இருந்தே முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி கல்வி அமைச்சின் 1377 என்ற இலக்கத்தின் ஊடாக குறைந்தது 45 மாணவர்களுக்காக கல்வியூட்டல் நடத்தப்படவுள்ளது.இதற்கான கணணி மென்பொருளை டயலொக் வழங்குகிறது. இந்த திட்டத்துக்காக 9 மாகாணங்களிலும் 100 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

Be the first to comment

Leave a Reply