இளம்பெண்ணிற்கு காவல்நிலையத்தில் நடந்த துயரம்… பதட்டத்தில் கதறிதுடித்த உறவினர்கள்..!

சென்னையில் காவல்நிலையத்தில் இளம்பெண்ணை காவலர்கள் தாக்கியதால் வலிப்பு ஏற்பட்டு துடிக்கும் காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

காவல்நிலையில் பெண் ஒருவர் வலிப்பில் துடித்துக்கொண்டிருக்கும் போது, அங்கு அப்பெண்ணின் உறவினர்கள் கூச்சல் போட்டு பதட்டத்தில் காணப்படுகின்றனர்.

இக்காட்சி சென்னையில் பாரிமுனையில் உள்ள காவல்நிலையத்தில் நடந்தது என்றும் இப்பெண்ணை அடித்ததால் வலிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த பெண்ணை மீட்டு ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த பெண்ணின் பெயர் காவேரி(25). இவரது அண்ணன் வைத்திருந்த பழக்கடையை பொலிசார் எடுக்கக்கோரி தகராறு செய்ததில் குறித்த பெண் அண்ணனுக்காக பொலிசாரை கோபத்தில் பேசியுள்ளார். இதனால் இவரையும், இவரது அண்ணனையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்பொழுதே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது

Be the first to comment

Leave a Reply