அம்பலமாகிய மாப்பிள்ளையின் ரகசியம்… திருமணத்தினை நிறுத்திய பெண் வீட்டார்! பெண்ணை துடிக்க துடிக்க கடத்திச்சென்று நிகழ்ந்த கொடுமை..!

திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கும் பெண் வீட்டார்கள் எவ்வளவு உஷாராக இருக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் அடுத்த மல்லி காலனி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் யவனம். பள்ளியில் ஆசிரியராக வேலை செய்துவரும் இவருக்கும், உறவினராக பவித்திரன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மணப்பெண்ணின் பெற்றோருக்கு வந்த போன் காலில் பவித்ரனுக்கு ஏற்கெனவே திருமணம் நடைபெற்றுள்ளதாக கூறிய நிலையில் பெண் வீட்டினர் திருமணத்தினை நிறுத்தியுள்ளனர்.

பெண் வீட்டாருக்கு மிரட்டல் விடுத்த பவித்ரன் ஒரு கட்டத்தில், பெண் வீட்டாரைத் தாக்கிவிட்டு யவனத்தை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளார்.

அவர்களிடமிருந்து தப்பிக்க நினைத்த பெண் பயணத்தின் போது கீழே விழுந்துள்ளார். இதில் அவரது இடது கால் மணிக்கட்டில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது. இதனை சற்றும் பொருட்படுத்தாத இளைஞரும், அவரது கும்பலும் பெண்ணை இழுத்துச்சென்று உறவினர் வீட்டில் அடைத்து வைத்துள்ளனர்.

பின்பு பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில், கடத்தலில் ஈடுபட்டவர்களின் செல்போன் எண்ணை ட்ராக் செய்து பெண் இருக்கும் இடத்தினைக் கண்டுபிடித்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கடத்தலில் ஈடுபட்ட பவித்திரன் ,வெங்கடேசன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பலைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தன்னுடைய சுயரூபம் தெரிந்ததால் பெண் வீட்டார் கல்யாணத்தை நிறுத்திய நிலையில், அந்த பெண்ணையே துடிக்கத் துடிக்க கடத்திய இளைஞரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Be the first to comment

Leave a Reply