இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு தொடரும் எச்சரிக்கை..!

5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கையானது தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று 2 மணிவரை பிறப்பிக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது நாளை பிற்பகல் 2 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக குறித்த ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல, மண்சரிவு அபாய எச்சரிக்கை ஏற்படும் ஆபத்து இருக்குமாயின் அப்பிரதேசத்தில் உள்ள மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply