சாதாரண மக்களை அனுமதிக்காத இலங்கை அரசு அமைச்சர் மகளை அனுமதிக்குமா ..!

தொண்டமானின் மகள் தனிமைப்படுத்தல்; இறுதி கிரியையில் பங்கேற்க முடியாத நிலை

மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ள முடியாத நிலையை அவரது மூத்த மகள் கோதை நாச்சியார் எதிர்நோக்கியுள்ளார்.

மத்திய கிழக்கு நாடான மஸ்கட்டில் இருந்த கோதை இலங்கைக்குவர கடந்த இரண்டு நாட்களாக முயன்று வந்தார். இறுதியாக அரச உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர நடவடிக்கையால் இந்தியா ஊடாக அவர் இன்று (29) அதிகாலை கொழும்பு வந்தடைந்தார்.

ஆயினும் நாடு திரும்பிய கோதை 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டு உள்ளதால் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ள முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சோகமான நிலைமையை கருத்தில் கொண்டு அவரை தூர இருந்து தந்தையாரின் பூதவுடலை பார்க்க அனுமதிப்பதா என்று சுகாதார அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக அறிய முடிகின்றது.

Be the first to comment

Leave a Reply