உங்களை திருமணம் செய்து கொள்கிறேன்! வெளிநாட்டில் வசிக்கும் இளைஞர்களை மயக்கிய பெண் செய்த செயல்.. அதிர்ச்சி பின்னணி

இந்தியாவின் தெலங்கானாவை சேர்ந்த தாய் – மகன் வெளிநாட்டில் வசிக்கும் இளைஞர்களை குறி வைத்து நூதன முறையில் பணத்தை ஏமாற்றிய பின்னணி வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தின் ஜூப்லி ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர் மாளவிகா தேவி. இவர் மகன் வெங்கடேஷ்வரா பிரணவ் கோபால் (22).

இருவரும் சேர்ந்து மேட்ரிமோனி இணையளத்தில் கீர்த்தி மாதவேணி என்ற பெண் பெயரில் போலியான கணக்கு தொடங்கி வெளிநாட்டில் உள்ள பல இளைஞர்களை நாடி அவர்களை திருமணம் செய்ய விருப்பம் உள்ளதாக கவரும் வகையில் பேசியுள்ளனர்.

அந்த வகையில் கலிபோர்னியாவில் உள்ள வருண் என்பவருடன் நட்பாகியுள்ளனர். அப்போது கீர்த்தி பெயரில் இருந்த மாளவிகா, வருணிடம் தான் பெரிய மருத்துவர் எனவும் தனக்கு அதிகளவில் சொத்துக்கள் உள்ளது எனவும் கூறி மயக்கியுள்ளார்.

இதோடு என் தந்தை இறந்துவிட்டார், இதையடுத்து என் பெயரில் உள்ள சொத்துக்களை தன் பெயரில் மாற்றி தருமாறு என் தாயார் அடித்து கொடுமைப்படுத்துகிறார்.

இது சம்மந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன், வழக்கு செலவுக்கு ரூ 65 லட்சம் பணம் தேவைப்படுகிறது.

வழக்கில் வெற்றி பெற்றவுடன் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.

இதை உண்மை என நம்பிய வருண் அவர் கேட்ட பணத்தை வங்கிக்கணக்கு மூலம் செலுத்தியுள்ளார்.

பின்னர் மாளவிகாவை தொடர்பு கொள்ள முயன்ற போது அவர் பதிலளிக்கவில்லை, இதையடுத்தே தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த வருண் பொலிசாரை நாடியுள்ளார்.

இதையடுத்து பொலிசார் மாளவிகாவையும் அவருக்கு உதவிய மகன் கோபாலையும் கைது செய்துள்ளனர்.

இருவரும் இதே போல பலரை ஏமாற்றி கோடிகளில் பணம் சம்பாதித்தது விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில் மேலும் நடத்தப்படும் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply