வளிண்டமலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்..!

நாட்டின் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காலம் படிப்படியாக ஆரம்பித்திருப்பதால் நாட்டில் நிலவுகின்ற மழையுடனான வானிலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல் ,வடமேல் ஆகிய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்வதுடன் சப்ரகமுவ ,தென் ,மேல் ஆகிய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி மொஹம்மட் சாலிஹின் தெரிவித்தார்.

கிழக்கு ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் இரவு வேளையில் மழை பெய்யுமெனவும் வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply