இலங்கையில் 1,500 ஐ தாண்டிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

இலங்கையில் 1,500 ஐ தாண்டிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,500 ஐ தாண்டியுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) மாலை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 17 பேர் இனங்காணப்பட்டுள்ள நிலையில், மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,503 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்சமயம் 748 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருவதுடன், 745 குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

68 பேர் தொடர்ந்தும் நோய்த்தொற்றுச் சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply