யாழ் மாவட்ட ஆளுநராக முன்னாள் கட்டளைத்தளபதி..!

முன்னாள் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த அத்துருசிங்க வடமாகாண ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வடமாகாண ஆளுநராக உள்ள பி.எஸ்.எம் சாள்ஸ் வரும் பொதுத்தேர்தல் முடிந்தவுடன் ஓய்வு பெறவுள்ளார் என கூறப்படுகிறது.

இந்தநிலையில் வெற்றிடமாகும் அப்பதவிக்கு மேஜர் ஜெனரல் மஹிந்த அத்துருசிங்கவை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

1980களில் இராணுவத்தில் இணைந்த மேஜர் ஜெனரல் அத்துருசிங்க, இறுதியாக போரின்போது 65ஆவது படைப் பிரிவுக்கு கீழ் இருந்த 652ஆவது பிரிவின் கீழ் இருக்கும் பீரங்கிப் படையை தலைமை தங்கியிருந்தார்.

அத்துடன் தற்போதைய பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அவர், யாழ் கட்டளைத் தளபதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply