நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு..!

எதிர்வரும் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுபடுத்தபடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 3ஆம் திகதி வரை நாடு முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்கும்.

இத்துடன், ஜூன் 4 மற்றும் 5 ஆம் திகதிகளிலும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 6ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தொடர்ந்தும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply