பிரித்தானியாவில் ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண் முதல் முறையாக நீதிபதியாக நியமனம்! யார் இவர் தெரியுமா?

பிரித்தானியாவில் ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண் ரபியா அர்ஷத் என்பவர் முதல் முறையாக நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

40 வயது மதிக்கத்தக்க Raffia Arshad, 17 ஆண்டுகால சட்ட வாழ்க்கைக்கு பிறகு கடந்த வாரம் மிட்லாண்ட்ஸ் சுற்று வட்டாரத்தில் துணை மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து Raffia Arshad கூறுகையில், நான் இதை தனிப்பட்ட சாதனையாக பார்க்கவில்லை. அதை விட பெரியது. இது இஸ்லாமிய பெண்களுக்கு மட்டுமல்ல, எல்லா பெண்களுக்கும் முக்கியமானது.

ஆனால் இது இஸ்லாமிய பெண்களுக்கு மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார்.

மேலும், அவர் புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி தளத்தின் பன்முகத்தன்மையை உறுதிசெய்ய பயன்படுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2002-ஆம் ஆண்டு லண்டனில் பயிற்சி பெற்ற Raffia Arshad, 2004-ல் செயின்ட் மேரியின் குடும்ப சட்ட அறைகளில் சேர்ந்தார்.

இவர், கட்டாய திருமணம், பெண் பிறப்புறுப்பு சிதைவு மற்றும் இஸ்லாமிய சட்ட சிக்கல்கள் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்றவர்.

இருப்பினும், தான் இவ்வளவு அனுபவங்களை பெற்றிருந்தாலும், பாகுபாட்டையும் எதிர்கொள்வதாக Raffia Arshad குறிப்பிட்டுள்ளார்.

17 ஆண்டுகளுக்கும் மேலாக நான் இதில் இருப்பதற்கு, எனக்கு ஆதரவாக இருந்த, என்னை மிகவும் ஆதரித்த கணவருக்கு கடன்பட்டிருக்கிறேன். அவர் என் ஆர்வத்தைத் தொடர இடம் கொடுத்ததாகவும் உருக்கமுடன் கூறியுள்ளார். Raffia Arshad-வுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

Be the first to comment

Leave a Reply