புதருக்குள் சிக்கி 19 நாட்கள் உயிருக்கு போராடிய 2 இளம்பெண்கள்: மலையேற சென்றதில் ஏற்பட்ட துயரம்..!

நியூசிலாந்தில் தேசிய பூங்கா ஒன்றில் மலையேற சென்ற இரு இளம்பெண்கள் விபத்தில் சிக்கி 18 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்தில் உள்ள Kahurangi தேசிய பூங்காவில் இச்சம்பவம் நடந்துள்ளது. ஜெசிகா கானர் மற்றும் டியான் ரெனால்ட்ஸ் ஆகிய இருவரையும் ஹெலிகொப்டரில் தேடிய பொலிசாரே கண்டுபிடித்துள்ளனர்.

மே 9 சனிக்கிழமையன்று இந்த ஜோடி தங்கள் முதுகுப்பைகளுடன் நடைபயிற்சிக்குச் சென்றபின் காணாமல் போயுள்ளனர்.

சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் தொலைந்து போனதாகவும், வெளியேற வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே மாயமான இருவரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. மட்டுமின்றி பொலிசார் ஹெலிகொப்டரிலும் களமிறங்கினர்.

அப்போது புதர் மண்டிய பகுதியில் இருந்து புகை எழும்புவதையும், இருவர் காப்பாற்றும்படி சைகை காட்டுவதையும் பொலிசார் கண்டறிந்துள்ளனர்.

உடனடியாக குறித்த பகுதிக்கு ஹெலிகொப்டரை செலுத்திய பொலிசார், ஜெசிகா கானர் மற்றும் டியான் ரெனால்ட்ஸ் ஆகிய இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இருவரும் மலையேறும் முயற்சியில் தவறி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒருவருக்கு கணுக்காலில் காயம் பட்டுள்ளது. ஒருவருக்கு முதுகுத்தண்டிலும்.

இருவரும் தற்போது சிகிச்சையில் இருப்பதாகவும், குணமடைந்த பின்னரே, அவர்களுக்கு என்ன நேர்ந்தது, 19 நாட்கள் சமாளித்தது எப்படி என்பது தொடர்பில் தெரியவரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply