
உணவின் மூலம் மட்டுமன்றி சில மூலிகை பானங்கள் அருந்துவதன் மூலமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
- தொற்றுநோய் அச்சுறுத்தலின் போது தொழிலாளர்களை ஆபத்தில் ஆழ்த்திய பிரண்டிக்ஸ்- உலக வங்கி விடுத்த வேண்டுகோள்!
- அரசின் பலம் சிதைவடையாது – மகிந்த வெளியிட்ட நம்பிக்கை
- பொதுஜனபெரமுனவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் கருத்துவேறுபாடு – தீர்வு காண தலையிட்டார் பிரதமர்
- இந்துக்களின் முக்கிய கோட்பாடு தீயிட்டு எரிப்பு- விடுக்கப்பட்ட கண்டனம்!
- இலங்கை விரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர்! வெளியானது தகவல்
மஞ்சள் கஷாயம் :
தேவையான பொருட்கள் :
- மிளகு பொடி – 1/2 tsp
- எலுமிச்சை சாறு – 1/2 tsp
- மஞ்சள் – 1 tsp
- தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை :
- தண்ணீரை சூடாக்கி அதில் மிளகுப் பொடி, மஞ்சள் கலந்து அதோடு எலுமிச்சை சாறு பிழிந்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- அதில் உள்ள மஞ்சளும், மிளகும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மிளகு சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். கொழுப்பும் கரையும்.
மூலிகை டீ :
தேவையான பொருட்கள்
- துளசி – 5-6 இலைகள்
- இஞ்சி – 1/2 இஞ்ச்
- ஏலக்காய் பொடி – 1 tsp
- மிளகு பொடி – 1/2 tsp
- சீரகம் – 1 tsp
- பட்டை பொடி – 1 tsp
- மஞ்சள் – 1/2 tsp
- டீ தூள் – 1 tsp
- வெல்லம் – 1 tsp
செய்முறை :
- தண்ணீர் கொதிக்க வைத்து, அதில் துளசி இலைகளை போட்டு கொதிக்க வையுங்கள். அதோடு டீ தூள், சீரகம் என கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் போட்டு கொதிக்க வையுங்கள். இஞ்சியை தட்டிப்போடுங்கள்.
- நன்கு கொதித்ததும் வடி கட்டி குடித்துப் பாருங்கள். சளி, இருமல் என எதுவுமே உங்களை நெருங்காது. நோய் தொற்றுகளும் நெருங்காது.
Be the first to comment