ஒரே ஒரு நிபந்தனையுடன் காதலர்களுக்கு மட்டும் தனது எல்லையை திறந்துவிட்ட நாடு:..!

கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ள அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பிரிக்கப்பட்ட காதலர்களுக்கு டென்மார்க் தனது எல்லைகளைத் திறந்துவிட்டுள்ளது.

டென்மார்க்கில் திங்களன்று நிலவரப்படி, ஜேர்மனி, பின்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் மீண்டும் தங்கள் டேனிஷ் காதலர்களை சந்திக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

ஆனால் அவர்கள், தாங்கள் உறவில் இருப்பதை உரிய முறைப்படி நிரூபிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

டென்மார்க்கில் உள்ள தமது காதலி அல்லது காதலரின் பெயர், முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள் தேவை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஊரடங்கு காலத்திற்கும் ஆறு மாதங்கள் முன்னர் வரை தொடர்பில் இருந்தவர்கள், மற்றும் இதற்கு முன்னர் நேரடியாக சந்தித்துக்கொண்டவர்களுக்காகவே தற்போது எல்லையை திறக்க டென்மார்க் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில் இணையம் வாயிலாக உறவை புதிதாக ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கு இந்த வாய்ப்பு பொருந்தாது.

dஎன்மார்க்கில் தங்கள் காதலி அல்லது காதலரை காண் விரும்பும் நபர்கள், கண்டிப்பாக புகைப்படம் ஒன்று அல்லது காதல் கடிதம் என ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.

வரும் நாட்களில், இருவரும் ஒன்றாக கையெழுத்திட்ட கடிதம் ஒன்று போதும் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

டென்மார்க் அரசின் இந்த புதிய சட்டம் ஆயிரக்கணக்கான காதலர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

அதில் ஒரு தம்பதி, டென்மார்க்கைச் சேர்ந்த 85 வயதான இங்கா ராஸ்முசென் மற்றும் ஜேர்மனியைச் சேர்ந்த 89 வயதான கார்ஸ்டன் ஹேன்சன்.

இந்த தம்பதி கடந்த வருடம், பெரும்பாலும் தினசி எல்லை நகரமான அவென்டோஃப்ட் அருகே தினமும் சந்தித்து, தங்கள் உறவை வளர்த்து வந்துள்ளனர்.

இதனிடையே, கொரோனா பரவலை அடுத்து, பொதுமக்கள் பொதுவெளியில் கூடுவதை தடை செய்ததுடன், தமது எல்லைகளையும் மூடியது டென்மார்க் அரசு.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவலை எதிர்கொள்ள ஊரடங்கை முதலில் அமுலுக்கு கொண்டுவந்த நாடு டென்மார்க் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply