அரசாங்கம் அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடு!

கொரோனா வைரஸ் தொற்றினையடுத்து ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமைக்கமைய கூட்டங்கள் நடத்துவதற்கு சுகாதார விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளி அரங்கில் அல்லது உள் அரங்கில் கூட்டம் நடத்துவதென்றால் ஒரு மீற்றர் தூரத்தில் நடத்த வேண்டும். எனினும் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த வேண்டும் என சுகாதார பிரிவு வெளியிட்டுள்ள ஆலோசனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமையின் கீழ் பகிரங்க கூட்டங்கள் அனைத்தையும் நடத்துவதற்கு அனுமதிகள் வழங்கப்படாது. எனினும் முக்கிய கூட்டங்கள் நடத்துவதென்றால் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாகும்.

கலந்து கொள்ளும் அனைவரும் சவர்க்காரம் பயன்படுத்தி கை கழுவுதல், செனிடைஸர்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

கூட்டத்தின் போது ஒருவருக்கு ஒருவர் இடையிலான தூரம் ஒரு மீற்றராக காணப்பட வேண்டும். கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டாலும் பகிரங்கள் கூட்டங்கள் நடத்துவதென்றால் அதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply