கொரோணாவிற்காக மேலும் இரு வைத்தியசாலைகள் இலங்கையில் தயார்..!

இனிவரும் காலங்களில் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் இலங்கை பணியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பின் அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு மேலும் இரண்டு வைத்தியசாலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, தெல்தெனிய வைத்தியசாலை மற்றும் ஹம்பாந்தோட்டை பழைய வைத்தியசாலை என்பனவே கொரோனா தொற்றாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் தற்போது, குவைத்திலிருந்து வருகைதந்த அனைவரினதும் பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply