தொண்டமானின் இடத்தை நிரப்பும் அடுத்த தொண்டமான்..!- பிரதமர் ஒப்புதல்..!

நேற்று பிரதமரை சந்தித்தபோது ஆறுமுகன் தொண்டமான் எடுத்துக் கொண்ட கடைசிப் புகைப்படம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஆறுமுகன் தொண்டமானின் வெற்றிடத்திற்கு ஜீவன் தொண்டமான் போட்டியிடுவார் என, செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் இ.தொ.கவின் ஆறுமுகன் தொண்டமான் போட்டியிடவிருந்தார். எனினும், நேற்று அவர் திடீரென உயிரிழந்தார்.

இந்த நிலையில் இன்று, பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இ.தொ.க பிரதிநிதிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். 

இதன்போது, நுவரெலியா மாவட்டத்தில் ஆறுமுகனிற்காக, அவரது மகன் ஜீவன் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டது.

பின்னர், இந்த விடயத்தை செய்தியாளர்களிடமும் செந்தில் தொண்டமான் உறுதிசெய்தார்.

எனினும், கட்சித் தலைமை குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லையென தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply