அழகிகளுடன் அந்தப்புரத்தில் தனிமைப்படுத்தலை விழாவாக கொண்டாடும் தாய்லாந்து மன்னர்..!

தன்னுடைய அழகிகள் படையில் உள்ள சிலருடன் தாய்லாந்து மன்னர் சுற்றும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா விதிகளுக்காக தனிமைப்படுத்தலை பின்பற்றுவதாகக் கூறி, சொந்த நாட்டை விட்டு வெளியேறி ஜேர்மனியிலுள்ள சொகுசு ஹொட்டல் ஒன்றில் உல்லாசம் அனுபவித்து வருகிறார் தாய்லாந்து மன்னரான Maha Vajiralongkorn (67).

தற்போது புதிதாக கிடைத்துள்ள சில புகைப்படங்களில் Maha Vajiralongkorn தனது சொகுசு ஹொட்டலிலிருந்து சைக்கிள் ஒன்றில் தனது அழகிகள் படையிலுள்ள சிலருடன் சைக்கிள் சவாரி செய்வதைக் காண முடிகிறது.

லெக்கிங்ஸ், ஹெல்மட், கூலர்ஸ் என ஆள் அடையாளமே தெரியாமல் தனது அழகி ஒருவருடன் Maha Vajiralongkorn சைக்கிள் சவாரி செய்ய, அவருக்கு பின்னால் சற்று தொலைவில் மற்ற அழகிகள் சில அவரை பின்தொடர்கிறார்கள்.

அவர் குறிப்பிட்ட தொலைவுக்கு வந்து சேர்ந்ததும், தயாராக நிற்கும் மூன்று கேரவன்களில் ஒன்றில் உடை மாற்றிக்கொள்கிறார் Vajiralongkorn.

இதற்கிடையில் Vajiralongkorn ஜேர்மனியில் நீண்ட காலம் தங்குவது உள்ளூர் மக்களையும் அரசு அலுவலர்களையும் எரிச்சலூட்டியுள்ளது.

கிரீன்ஸ் கட்சியைச் சேர்ந்த Katharina Schulze, தாய்லாந்து மன்னர் வர்த்தக நோக்கம் எதுவும் இல்லாமல் கொரோனா நேரத்தில் ஜேர்மனியில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply