அமைச்சர்களின் பிள்ளைகளை அழைத்தும், சாதாரண மக்களை அழைக்காமை ஏன்..?

கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் சம்பளம் இல்லாமல் நீண்ட விடுமுறையில் சிக்கித் தவிக்கும் இலங்கையைச் சேர்ந்த சுமார் 85 துறைசார் வல்லுனர்களும் தாய்நாடு திரும்புவதற்காக விசேட விமானமொன்றை ஏற்பாடு செய்து தருமாறு இலங்கை அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்படி துறைசார் வல்லுனர்கள் குழு வெளிவிவகார அமைச்சினூடாக தமது கோரிக்கையை ஜனாதிபதி, செயலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சரிடம் முன்வைத்துள்ளனர்.

இலங்கை அரசாங்கத்துக்கு எவ்விதத்திலும் பாரமின்றி சொந்த செலவில் சுயமாக செயற்பட தாங்கள் தயாராகவுள்ளதாகவும் அவர்கள் தமது கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் அனுப்பியுள்ள கோரிக்கை கடிதத்தில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது-,

கொரோனா காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள நாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். நாம் சம்பளமின்றி நீண்ட விடுமுறையில் உள்ளோம்.

சுகாதார நிலையை கருத்திற் கொண்டு நாம் மீண்டும் தாய் நாடு திரும்ப விரும்புகின்றோம். தற்போது இலங்கை அரசாங்கம் வெளிநாட்டிலுள்ளவர்களை மீட்பதற்காக அயராது உழைக்கும் அதேநேரம் பாரிய சுமையை எதிர்கொண்டிருப்பதையும் நாம் அறிவோம்.

நாம் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் கொவிட்-19க்கான சோதனையை முன்னெடுப்போம்.

எமது குழுவில் மொத்தமாக 85 பேர் உள்ளோம். எமது விமானப் போக்குவரத்துச் செலவு மற்றும் விமான நிலையத்திலிருந்து வீடு திரும்புவதற்கான செலவு ஆகிய அனைத்தையும் நாம் பொறுப்பேற்க தயாராகவுள்ளோம்.

நாட்டுக்கு சுமையின்றி இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply