திருமணமான பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞன்! ஆனால் கணவரை கைது செய்த பொலிஸ்..!

திருமணமான பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞன்! விசாரணையில் தெரியவந்த பல உண்மைகள்

அலுவலகத்தில் பணியாற்றிய பெண்ணை, மிரட்டி ஆபாச வீடியோ எடுத்ததுடன், தன்னுடைய இச்சைக்கு இணங்குமாறு மிரட்டிய தனியார் டிடெக்டிவ் ஏஜென்டை தமிழக பொலிசார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் ஊமச்சிக்குளம், அன்னை வேலுநகரைச் சேர்ந்தவர் கணேஷ் ஆனந்த்(28). மதுரை அய்யர்பங்களா பகுதியில் ஸ்பைடர் என்ற பெயரில் தனியார் டிடெக்டிவ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனத்திற்கு நிர்வாக பணிக்கு ஆள் தேவை என தனியார் நிறுவனம் மூலம் 18 நாட்களுக்கு முன் இணையத்தில் விளம்பரப்படுத்தியுள்ளார்.

அதன் படி, ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர் மதுரை செல்லூரை சேர்ந்த லோடுமேன் ஒருவரை 5 ஆண்டுகளுக்கு முன் பேஸ்புக்கில் பழகி காதல் திருமணம் செய்துள்ளார்.மதுரை செல்லூரில் தம்பதிகள் வசித்து வரும் நிலையில் குடும்ப வறுமை காரணமாக டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சென்ற அந்த பெண், இணையதளத்தில் வந்த டிடெக்டிவ் நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்து விண்ணப்பித்துள்ளார். நேர்முகத்தேர்வில் அவரை கணேஷ் ஆனந்த் தேர்வு செய்த நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் 23-ஆம் திகதி அன்று அய்யர்பங்களாவில் உள்ள டிடெக்டிவ் நிறுவனத்திற்கு அந்த பெண் பணிக்குச் சென்ற நிலையில் மதியம் 12:30 மணியளவில் அலுவலக கதவுகளை அடைத்த டிடெக்டிவ் கணேஷ்ஆனந்த், அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.

அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் அங்கிருந்த கட்டையால் அவரை தாக்கி ஆடைகளை அவிழ்க்க கூறியுள்ளார். மறுத்த போது அடித்து ஊமை காயம் ஏற்படுத்தியுள்ளார். அடிக்கு பயந்து ஆடைகளை அவிழ்த்த பெண்ணை, முழுவதுமாக வீடியோ எடுத்த கணேஷ் ஆனந்த், தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் சமூக வளைதளங்களில் வீடியோவை வெளியிடுவேன் என்றும், வெளியில் கூறினால் கணவரை கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, அங்கிருந்து தப்பிய அந்த பெண், உடனடியாக நடந்த சம்பவத்தை கணவரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து சென்று அவரை தாக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து செல்லூர் காவல் நிலையத்தில் கணேஷ் ஆனந்த் அளித்த புகாரின் பேரில் அந்த பெண்ணின் கணவரை பொலிசார் கைது செய்தனர்.

Be the first to comment

Leave a Reply