கொரோனா ஆபத்திலிருந்து தப்பி இலங்கை வர தயார் நிலையில் 41000 பேர்

வெளிநாடுகளில் வசிக்கும் 41ஆயிரம் இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு தயாராக இருப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்ப முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு வருவதற்கு எதிர்பார்க்கும் இலங்கையர்களை அழைத்து வரும் வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவுப்படுத்துவதற்காக நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறிள்ளார்.

சமகாலத்தில் வெளிநாடுகளில் 26 லட்சம் இலங்கையர்கள் ள்ளதாகவும் 16 ஆயிரம் பேர் வெளிநாட்டு பணியாளர்கள் எனவும் அமைச்சர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரியப்படுத்தியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply