கருணாவை வீதியில் வைத்து மறித்து தமிழ் மக்களுக்காக ஆதங்கப்பட்ட பௌத்த துறவி..!

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கல்முனைப் பகுதிக்கு சென்றுள்ளார்.

இதன்போது அவரை வீதியில் வைத்து வழிமறித்த கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தமிழ் மக்கள் சார்பில் பல விடயங்களை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதாக பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாத நிலை காணப்படுவதாக தேரர், கருணாவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Be the first to comment

Leave a Reply