தாய், மகள் இருவர் மீதும் காதல்! கிணற்றில் 9 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் முழு தகவல்..!

முறையற்ற காதலால் 10 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் மசூத்நிஷா தம்பதியினர் தனது குடும்பத்தினருடன் 20 ஆண்டுகளாக வாரங்கல் கீர்த்தி நகரில் உள்ள கோணிப்பை தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர். அப்போது அவர்களுக்கு பீகாரை சேர்ந்த சஞ்சய் குமார் என்பவர் பழக்கம் ஏற்பட்டுள்ளார்.

இந்நிலையில், நிஷாவின் அக்கா மகள் ரபிகா என்பவர் தனது 16 வயது மகள் மற்றம் இரண்டு மகன்களுடன் மேற்குவங்க மாநிலத்திலிருந்து பிழைப்பு தேடி வாரங்கல் பகுதிக்கு வந்துள்ளார்.

சஞ்சய்க்கு உணவு சமைத்து கொடுக்க யாரும் இல்லை என்பதால், ரபிகா உணவு வழங்கி வந்துள்ளார். இதனிடையே ரபிகாவுக்கும் சஞ்சய்க்கும் காதல் மலர்ந்துள்ளது.

ரபிகா தனது மூன்று பிள்ளைகளுடன் சஞ்சய்யை திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்று திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், சஞ்சய்க்கு ரபிக்காவின் 16 வயது மகள் மேல் ஈர்ப்பு ஏற்பட்டு, அச்சிறுமியுடன் நெருக்கம் காட்டி வந்துள்ளான்.

இதை அறிந்து கொண்ட ரபிகா சஞ்சையை கடுமையாக கண்டித்துள்ளார். எனவே மார்ச் 7ஆம் திகதி ரபிகாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி மேற்கு வங்கத்திற்கு ரயிலில் அழைத்து சென்றுள்ளான்.

ரயிலில் பயணிக்கும் போது இரவில் மோரில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து ரபிகாவைத் தூங்க வைத்து. அதிகாலை 3 மணி அளவில் துப்பட்டவை எடுத்து ரபிகாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளான்.

பின் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி மற்றொரு ரயிலில் ஏறி வாரங்கலிற்கு வந்துள்ளான்.

இந்நிலையில், சஞ்சய் திரும்பியதும், நிஷா ரபிகா எங்கே என்று விசாரித்துள்ளார். அதற்கு பீகாரில் உள்ள தனது வீட்டிற்கு ரபிகா சென்றுள்ளதாக சஞ்சய் தெரிவித்துள்ளான்.

அங்கிருந்து அலைபேசி அழைப்பு எதுவும் வராததால் நிஷாவிற்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவர், மீண்டும் சஞ்சயிடம் உண்மையை கூறவில்லை என்றால் பொலிஸில் புகார் தெரிவிப்பேன் என்று கடுமையாக எச்சரித்துள்ளார். அதன்பின் தான் அழைத்து சென்றேன் என்று மட்டும் சஞ்சய் நிஷாவிடம் தெரிவித்துள்ளான்.

தொடர்ந்து மசூத்நிஷாவின் தம்பதியின் மூத்த மகனுக்கு கடந்த 21ஆம் திகதி பிறந்த நாள் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிந்து கொண்ட சஞ்சய் அதில், கலந்து கொண்டு அனைவரையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளான்.

அவன் திட்டபடி, தூக்கமாத்திரைகளை குளிபானத்தில் கலந்து கொடுத்துள்ளான்.பார்ட்டியில் அங்கு பணிபுரியும் பீகாரை சேர்ந்த 3 இளைஞர்கள் உட்பட 9 பேர் அந்த குளிபானத்தை குடித்து மயங்கியுள்ளனர்.

இரவு 12:30மணிக்கு அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கையில், சஞ்சய் தனியாளாக ஒவ்வொரு வரையாக கோணிப் பையில் வைத்து கட்டி அருகில் உள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளான். பின் சிசிடிவி கமெரா காட்சி மூலம் சஞ்சய் சிக்கி கொண்டான்.

ஒரு கொலையை மறைக்க 9 கொலைகள் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Be the first to comment

Leave a Reply