இந்தியாவில் கொரோனா தொற்று உக்கிரமடைந்தால் அதன் மூலம் இலங்கைக்கு கடும் பாதிப்பு என எச்சரிக்கை..!

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதன் அச்சுறுத்தல் இலங்கைக்கும் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் உள்ள தனது இல்லத்தில் இன்றைய தினம் முற்பகல் நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்துவதற்கான உற்சாகத்துடன் இருக்க வேண்டும். ஆனால் கடந்த ஆட்சிக்காலத்தில் தேர்தலை நடத்துவதற்கு எந்தவொரு உற்சாகமும் அந்த ஆணைக்குழுவுக்கு இருக்கவில்லை.

கடந்த காலங்களில் பொருட்களை விநியோகம் செய்தால் தலையில் சுடுவோம் என்று கூறியவர்கள் இன்று பிரதேசசபைத் தேர்தல்களை பிற்போடுகையில் மௌனமாக இருந்தார்கள்.

மாகாணசபைத் தேர்தல்கள் குறித்தும் அப்படியே. தற்போதும் தேர்தலை நடத்துவதற்கான உற்சாகத்திற்குப் பதிலாக தேர்தலை நடத்தக் கூடாது என்கின்ற உற்சாகமே அவர்களுக்கு இருக்கின்றது என்று சந்தேகம் உள்ளது.

தேர்தலை நடத்துவதற்கான ஆணைக்குழுவுக்குப் பதிலாக தேர்தலை நடத்தக்கூடாத ஆணைக்குழுவாக அவர்கள் மாறிவிடக் கூடாது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசிக் கலந்துரையாடல் குறித்தும் இதன்போது பிரதியமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply