அவன் என் மாப்பிள்ளை இல்லை என எதிரி சவால்விட்டார்! விஷப்பாம்பை வைத்து மனைவியை கொன்ற நபரின் தாய் கூறிய பகீர் தகவல்..!

கேரளாவில் மனைவியை விஷப்பாம்பை கடிக்க வைத்து கொலை செய்ததாக கணவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் தாயார் அது தொடர்பில் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில், அஞ்சல் பகுதியை சேர்ந்த உத்ரா என்ற இளம்பெண்ணை விஷப்பாம்பை வைத்து கொன்றதாக அவர் கணவர் சூரஜை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த தம்பதிக்கு திருமணமாகி இரண்டாண்டுகள் ஆகிய நிலையில் எதற்காக இந்த கொலை நடந்தது என்பது சரியாக இன்னும் தெரியவில்லை.

பணம், நகைக்காக கொலை நடந்திருக்கலாம் எனவும், இரண்டாம் திருமணம் செய்ய மனைவியை சூரஜ் கொன்றிருக்கலாம் எனவும் பரவலாக தகவல் வெளியாகும் நிலையில் பொலிசார் இன்னும் இதை உறுதிசெய்யவில்லை.

இந்த நிலையில் உத்ரா மரணத்துக்கும் தனது மகனுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என சூரஜின் தாயார் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், என் மகன் எந்தக் குற்றமும் செய்யவில்லை, அவர் காவல்துறையினரால் இந்த வழக்குக்கு உள்ளே கொண்டு வரப்பட்டுள்ளார்.

சூரஜ் அந்த வகையான மோசமான மனிதன் அல்ல, இது அவன் வீட்டருகில் வசிப்பவர்களுக்கு கூட தெரியும்.

காவல்துறையினர் சூரஜை தாக்கி இந்த குற்றத்தை ஒப்புகொள்ள வைத்துள்ளனர்.

பாம்பை வீட்டிற்கு கொண்டு வந்த பிளாஸ்டிக் ஜாடி தங்களுக்கு கிடைத்தது என்று பொலிசார் கூறுகிறார்கள். அவன் ஒரு பெரிய குற்றவாளி என்றால் அவர் ஜாடியை அறையில் விட்டு சென்றிருப்பானா?

உத்ரா இறந்த ஐந்தாவது நாளுக்கு பிறகு தான் பிரச்சனைகள் உருவாக ஆரம்பித்தன.

சூரஜ் தனது மாமனார், மாமியாரிடம் தனக்கு வரதட்சணையாக கிடைத்த நிலம், கார் தனக்கு இனி தேவையில்லை என்று கூறினார் .

அப்போதிருந்து உத்ராவின் சகோதரர் தான் சூரஜுக்கு தரப்பட்ட காரைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.

மேலும் சூராஜ் தனது எதிரி என்றும் அவரது மாப்பிள்ளை அல்ல என்றும் உத்ராவின் தந்தை கூறியதோடு, இந்த வழக்கில் அவனை சிக்க வைப்பேன் என சவால் விட்டார்.

இதை செய்ய தங்களிடம் பணபலம் உள்ளதாகவும் உத்ரா குடும்பத்தார் கூறியதாக சூரஜ் தாயார் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply