இலங்கையில் அழிந்ததாக கருதப்பட்ட கரும்புலி மீண்டும் தென்பட்டது..!

மஸ்கெலியா நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்சபான தோட்ட வாழமலை பிரிவில் இன்று காலை கரும்புலி ஒன்று மரக்கறி தோட்ட பாதுகாப்பு வேலிக்குள் அகப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வனத்துறை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் மக்களின் பாதுகாப்பை உறுதி படுத்திக்கொள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், இப்புலியானது உயிருடன் இருப்பதால் மிருக வைத்திய அதிகாரி வருகை தரும் வரை அதனை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

Be the first to comment

Leave a Reply