யாழில் தனிமைப்படுத்தலில் இருந்தவர் திடீரென மயங்கி வீழ்ந்ததால் பரபரப்பு..!

யாழ்ப்பாணம் அராலி துறைப்பகுதியில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்தவர் திடீரென மயங்கி விழுந்ததால் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் கண்டியில் இருந்து உரிய அனுமதி பெற்று யாழ்ப்பாணம் அராலிக்கு வந்துள்ள நிலையில் பொது சுகாதார பரிசோதகரின் அறிவுறுத்தலுக்கு அமைய 14 நாட்கள் அவர் தனிமைப்படுத்தலில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதன் காரணமாக அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் என்ற சந்தேகத்தில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Be the first to comment

Leave a Reply