நாட்டு மக்களிடம் ஜனாதிபதியின் வேண்டுகோள்..!

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னரும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி தமது அன்றாட பணிகளை செய்வதோடு, கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் நாட்டின் பொருளாதாரத்தை மீள் கட்டியெழுப்புவதற்கும் ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தின் ஊடாக செய்தியொன்றை வெளியிட்டே அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தீவின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று அதிகாலை 5 மணி முதல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு மற்றும் கம்பாஹா மாவட்டங்களில் 66 நாட்களுக்குப் பின் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply