கொரோணாவின் இரண்டாம் அலைக்கு வாய்ப்பு – உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை..!

World Health Organization (WHO) Director-General Tedros Adhanom Ghebreyesus attends a daily press briefing on COVID-19 at the WHO headquaters on March 6, 2020 in Geneva. (Photo by FABRICE COFFRINI / AFP) (Photo by FABRICE COFFRINI/AFP via Getty Images)

கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும் நாடுகளில் வைரஸ் பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கும் போது, அங்கு கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உடனடியாக உருவாகும் வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

தற்போது உலகின் முதலாவது கொரோனா வைரஸ் அலையே இருப்பதாகவும் குறித்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் பாதிப்பு பல நாடுகளில் குறைந்து வரும் நிலையில், மத்திய மற்றும் தென் அமெரிக்கா, தெற்காசியா மற்றும் ஆபிரிக்காவில் வைரஸ் இன்னும் பரவி வருகிறது.

அதன்படி, தற்போது கொரோனாவின் முதல் அலை குறைந்து வரும் நாடுகளில் இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் அவசர சேவை தலைவர் டாக்டர் மைக் ரியான், ஜெனீவாவில் நடந்த இணையம் மூலமான செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply