சத்தமாக கதைத்தாலும் கொரோணா பரவும்..!

Screaming, hate, rage. Crying emotional angry woman screaming on blue studio background. Emotional, young face. Female half-length portrait. Human emotions, facial expression concept. Trendy colors

கொரோனா தொற்று இருமல் மற்றும் தும்மலின் போது வெளியாகும் நீர்த்திவலைகளால் பரவுவதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், கதைத்தாலும் கூட கொரோனா பரவும் என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின், தேசிய அறிவியல் மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், ஒருவர் கதைக்கும் போது வெளியாகும் உமிழ்நீர் மூலமும் மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று பரவும் என்று கூறப்பட்டுள்ளது.

அறிகுறியின்றி கொரோனா பாதிக்கப்பட்ட நபர் கதைத்தால், அவரது வாயிலிருந்து ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் நீர்த்திவலைகள் வெளியாகின்றது.

இவை காற்றில் 8 லிருந்து 14 நிமிடங்களுக்கு மிதந்தவாறே இருக்கக்கூடும் என்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

மற்றவர்களை விட சப்தமாக கதைக்ககூடிய நபர்கள் 10 மடங்கு அதிகமான வைரசை காற்றில் பரப்புவதும் கண்டுபிடிக்கப்படடுள்ளது.

உமிழ் நீர் திவலைகளின் நீளம் மற்றும் வேகம் ஒவ்வொரு நபரின் பேச்சு, வயது, பேசும் போது எழும்பும் சத்தத்தின் அளவு ஆகியவற்றை பொருத்து மாறுபடுகிறது

Be the first to comment

Leave a Reply